புதுச்சேரி: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவர் செல்வம் உறுதிப்பட தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் ரவி சபையிலிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்து புதுவை பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலும் ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம், அதன் பிறகு மாநில வாழ்த்துப் பாடல் பின்பு ஆளுநர் உரை இருக்கும். ஆளுநர் உரை முடிந்து பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் பிறகு ஆளுநர் வழியனுப்பி வைக்கப்படுவார். தமிழகத்தின் வழிமுறைகள் என்ன என்று எனக்கு தெரியவில்லை. அது அவர்களுக்குத்தான் தெரியும்” என்று செல்வம் குறிப்பிட்டார்.