திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 19,15,564 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆண்கள் 9,29,706, பெண்கள் 9,85,625, இதரர் 233 என மொத்தம் 19,15,564 வாக்காளர்கள் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் உள்ளனர்.