சாவர்க்கர் மீதான களங்கத்தை பாஜகவினரால் துடைக்க முடியாது: செல்வப்பெருந்தகை


சென்னை: பிரிட்டிஷ் ஆட்சி​யாளர்​களின் ஏஜென்டாக இருந்த சாவர்க்கர் மீதான களங்​கத்தை பாஜக​வின​ரால் துடைக்க முடி​யாது என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து செல்​வப்​பெருந்தகை நேற்று வெளி​யிட்ட அறிக்கை: பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்​.சந்​தோஷ் சென்னை​யில் நேற்று நடைபெற்ற சாவர்க்கர் குறித்த நூல் வெளி​யீட்டு விழா​வில் பேசும்​போது, சாவர்க்கரின் தியாகத்​தால் லட்சக்​கணக்கான இளைஞர்கள் ஈர்க்​கப்​பட்டு விடுதலை போராட்​டத்​தில் இணைந்​ததாக கூறி​யிருக்​கிறார். இது ஒரு கடைந்​தெடுத்த பொய்.

தொடக்க காலத்​தில் விடுதலை போராட்​டத்​தில் பங்கேற்று 1911-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி கைது செய்​யப்​பட்டு அந்த​மான் சிறை​யில் சாவர்க்கர் அடைக்​கப்​பட்​டார். அடைக்​கப்​பட்ட 6 மாதத்​தில் பிரிட்​டிஷ் ஆட்சி​யாளர் களுக்கு 1911 முதல் 1920 வரை 11 மன்னிப்பு கடிதங்களை எழுதி தன்னை சிறை​யில் இருந்து விடுவிக்​கும்படி கேட்​டிருக்​கிறார்.

அந்த மன்னிப்பு கடிதங்​களில் இனி விடுதலை போராட்​டத்​தில் பங்கேற்க மாட்​டேன். பிரிட்​டிஷ் ஆட்சி​யாளர்​களின் விருப்​பத்​துக்கு மாறாக எந்த நடவடிக்கை​யிலும் ஈடுபட​மாட்​டேன். முழு விசுவாசியாக நடந்​து​கொள்​வேன். நான் செய்த குற்​றத்தை மன்னித்து விடுவிக்​கும்படி பல முறை வலியுறுத்தி இருக்​கிறார். இதற்கான ஆதாரங்கள் பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட்​டுள்ளன.

அதுபோல காந்​தியை படுகொலை செய்த நாதுராம் கோட்​சேவோடு நெருக்​கமான நட்பு கொண்​டிருந்​தவர் சாவர்க்​கர். இந்த வழக்​கில் 7-வது குற்​றவாளியாக சாவர்க்கர் சேர்க்​கப்​பட்​டார். ஆனால், நேரடி ஆதாரங்கள் இல்லை என கூறி விடுவிக்​கப்​பட்​டார்.

பிரிட்​டிஷ் ஆட்சி​யாளர்​களின் கைப்​பாவையாக செயல்​பட்​டவரை ஒரு விடுதலை போராட்ட வீரர் என்று அவதூறான செய்திகளை பாஜக கூறுவதை வரலாறு அறிந்த மக்கள் ஏற்றுக்​கொள்ள மாட்​டார்​கள். எனவே, விடு​தலைப் போராட்​டத்​தில் பிரிட்​டிஷ் ஆட்​சி​யாளர்​களின் ஏஜென்டாக இருந்த சாவர்க்​கரின் களங்​கத்தை பாஜக​வின​ரால் துடைக்க ​முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

x