நீதிப​திகள் நியமனத்​தில் வன்னியர்கள் உள்ளிட்ட சமூகங்களுக்கு பிரதி​நி​தித்துவம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: உயர் நீதி​மன்ற நீதிப​திகள் நியமனத்​தில் வன்னியர்கள் உள்ளிட்ட சமூகங்​களுக்கு உரிய பிரதி​நி​தித்துவம் வழங்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​: சென்னை உயர் நீதி​மன்​றத்தில் நடப்​பாண்​டின் முதல் 9 மாதங்​களில் மட்டும் 10 நீதிப​திகள் ஓய்வு பெறவுள்​ளனர். அவர்​களை​யும் சேர்த்து நடப்​பாண்​டில் 19 நீதிப​திகள் புதிதாக நியமிக்​கப்பட வேண்​டும்.

அவ்வாறு புதிய நீதிப​திகளை நியமிக்​கும்​போது வன்னியர்கள் உள்ளிட்ட கடந்த காலங்​களில் குறைந்த அளவில் பிரதி​நி​தித்துவம் அளிக்​கப்​பட்ட சமூகங்​களுக்​கும், பிரதி​நி​தித்துவமே அளிக்​கப்​படாத சமூகங்​களுக்​கும் போதிய பிரதி​நி​தித்துவம் அளிக்​கப்பட வேண்​டும்.

சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​திகள் நியமனத்​தில் தொடக்​கத்​திலிருந்தே வன்னியர்​களுக்கு மிக மிகக் குறைந்த அளவிலேயே பிரதி​நி​தித்துவம் அளிக்​கப்​பட்​டிருக்​கிறது. இப்போதும்கூட சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் உள்ள 66 நீதிப​தி​களில் மூவர் மட்டும்​தான் வன்னியர் சமூகத்​தில் இருந்து வழக்​கறிஞர்​களாக பணியாற்றி, நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்​ட​வர்கள் ஆவர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இதுவரை ஒட்டுமொத்​த​மாகவே 7 வன்னியர்கள்தான் வழக்​கறிஞர்​களாக பணியாற்றி நீதிப​தி​களாக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்கள் தவிர, 8 வன்னியர்கள் மட்டும்​தான் கீழமை நீதி​மன்​றங்​களில் நீதிப​தி​களாக பணியாற்றி, உயர் நீதி​மன்ற நீதிப​தியாக பதவி உயர்வு பெற்​றவர்கள் ஆவர்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் 162 ஆண்டுகால வரலாற்றில் தமிழகத்​தின் பெரும்​பான்மை சமூகமான வன்னியர்​களுக்கு 15 முறை மட்டுமே நீதிபதி பதவி வழங்​கப்​பட்டிருப்​பதும், அவர்​களி​லும் பலர் ஒரு சில ஆண்டுகளே நீதிப​தி​களாக பணியாற்ற முடிந்​திருப்​பதும் சமூக அநீதி​யின் எடுத்​துக்​காட்டு​களாக வரலாற்றில் பதிவாகும்.

இதேபோல், வேறு பல சமூகங்களுக்​கும் மிக மிகக் குறைவான பிரதி​நி​தித்துவமே வழங்​கப்​பட்​ டுள்​ளது. இன்னும் சில சமூகங்​களுக்கு இன்று வரை பிரதி​நி​தித்துவமே வழங்​கப்​பட​வில்லை என்பது வேதனையான உண்மை. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காலியாக உள்ள நீதிப​திகள் பணியிடங்​களுக்கு தகுதி​யானவர்​களைத் தேர்வு செய்து உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் கொலிஜி​யத்துக்கு பரிந்​துரைக்​கும் நடைமுறைகள் தொடங்கி​விட்​டதாக தெரிகிறது.

சமூக நீ​தியை உறுதி செய்​யும் வகையில் புதிய நீதிப​திகள் நியமனத்​தில் வன்னியர்கள் மற்றும் போதிய பிரதி​நி​தித்துவம் இல்லாத சமூகங்​களைச் சேர்ந்த, தகுதியும், திறமை​யும் கொண்ட வழக்​கறிஞர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்பட வேண்​டும் என உயர் நீ​தி​மன்​றத்தின் தலைமை நீ​திபதி தலை​மையிலான மூத்த நீ​திப​தி​கள் குழு​வைக் கேட்டுக் ​கொள்​கிறேன். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

x