இன்று காலை குஜராத் மாநிலம், போர் பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 2 பைலட்டுகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், அவர்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.