சு.வெங்கடேசன் எம்பி., மருத்துவமனையில் அனுமதி!


மதுரை தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விழுப்புரத்தில் நடைபெற்ற சிபிஎம் கட்சி மாநில மாநாட்டிற்காக வந்திருந்த நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

x