சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: வெடித்தது சர்ச்சை!


சென்னை: சென்னைப் புத்தகக்காட்சியில் சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கு பதிலாக பாரதிதாசன் பாடல் பாடப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48ஆவது சென்னைப் புத்தகக்காட்சியில் இன்று ‘தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?’ நூல் வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சீமான் உள்ளிட்ட பலரும் எழுந்து நின்றவுடன் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலான ‘நீராருங் கடலுடுத்த’ பாடலுக்கு பதிலாக பாரதிதாசனின் பாடலான ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே’ எனும் பாடப்பட்டது. இந்தப் பாடல் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக உள்ளது.

சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, வேறு ஒரு பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

x