திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நகை கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை


திண்டுக்கல்லில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நகைக்கடை.

திண்டுக்கல்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகை கடைகள் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜன.03) மாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் தினேஷ் மற்றும் இவரது தம்பி தீரஜ். இவர்கள் திண்டுக்கல் ஆர்.எஸ்., சாலை மற்றும் மேற்குரத வீதியில் வாசவி ஜூவல்லரி என்ற பெயரில் நகைகடைகள் நடத்திவருகின்றனர். இவர்களுக்கு ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டிலும் நகை கடை உள்ளது.

இவர்களது வீடு திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை மூன்று நகைகடைகள் மற்றும் உரிமையாளர் வீட்டிற்கு வந்த 20 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நகைகடைகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 4 மணிக்குமேல் துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் நகைகடைகளில் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.

x