சென்னை: விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இணைய தளம் வாயிலாகவோ அல்லது சம்மந்தப்பட்ட இணைப்பதிவாளர்களையோ தொடர்பு கொண்டு கரும்பு விவசாயிகள் பயன் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கிட உத்தரவிட்டார்கள்.
அதன்படி, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று (03.01.205) முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் (சென்னை தவிர) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களை தலைவராக கொண்டு உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் அவர்களை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுக்களில் கரும்பு கொள்முதல் செய்வதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னை தவிர) வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் / கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் உறுப்பினராக கொண்ட வட்டார அளவிலான கரும்பு கொள்முதல் குழு மற்றும் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களால் உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர், வேளாண்மை அலுவலர் / துணை வேளாண்மை அலுவலர் நிலையில் ஒரு அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் நிலையில் ஒரு அலுவலர் ஆகியோர் கொண்ட கரும்பு கொள்முதல் குழு மூலம் அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது.
கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதலில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது, மேலும், இக்குழுக்கள் மூலம் எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவர்த்தனை மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட வாரியாக கீழ்க்கண்ட இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக கரும்பு விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள்:
1. அரியலூர் 73387 20200
2. செங்கல்பட்டு V. நந்தக்குமார் 91760 01544
3. சென்னை R. இந்துமதி (கூடுதல் பதிவாளர்) 73388 50012
4. கோயம்புத்தூர் A. அழகிரி 73387 20301
5. கடலூர் K.C. இரவிச்சந்திரன் 73387 20401
6. தர்மபுரி K.T. சரவணன் 73387 20501
7. திண்டுக்கல் S. குருமூர்த்தி 73387 20601
8. ஈரோடு K. ராஜ்குமார் 73387 20701
9. கள்ளக்குறிச்சி S.P. முருகேசன் 91760 01549
10. காஞ்சிபுரம் P. ஜெயஸ்ரீ 73397 20801
11. கன்னியாக்குமரி C.L. சிவகாமி 73387 20901
12. கரூர் P. கந்தராஜா 73387 21001
13. கிருஷ்ணகிரி G. நடராஜன் 73387 20525
14. மதுரை Su. சத்தீஷ் குமார் 73387 21100
15. மயிலாடுதுறை A.தயாள விநாயகன் அமுல்ராஜ் 91760 01546
16. நாகப்பட்டினம் A.தயாள விநாயகன் அமுல்ராஜ் 73387 21201
17. நாமக்கல் G.P. அருளரசு 73387 21300
18. நீலகிரி R.தயாளன் 73387 21400
19. பெரம்பலூர் M.தீபா சங்கரி 73387 20216
20. புதுக்கோட்டை A. ஜீவா 73387 21500
21. இராமநாதபுரம் G. ஜினு 73387 21600
22. இராணிப்பேட்டை J. மலர்விழி 96553 46969
23. சேலம் K. ராஜ்குமார் 73387 21700
24. சிவகங்கை G. ராஜேந்திர பிரசாத் 73387 21801
25. தென்காசி G. நரசிம்மன் 91760 01541
26. தஞ்சாவூர் S. தமிழ்நங்கை 73387 21900
27. தேனி T. ஆரோக்கிய சுகுமார் 73387 22001
28. திருநெல்வேலி P.M. முருகேசன் 73387 22100
29. திருவாரூர் K. சித்ரா 73387 49200
30. திருப்பத்தூர் A. பாலகிருஷ்ணன் 73387 49701
31. திருப்பூர் T. பிரபு 73387 20334
32. திருவள்ளூர் T. சண்முகவள்ளி 73387 49100
33. திருச்சி T. ஜெயராமன் 73387 49300
34. தூத்துக்குடி R. ராஜேஷ் 73387 49400
35. திருவண்ணாமலை S. பார்த்திபன் 73387 49500
36. வேலூர் S. திருகுண ஐயப்பதுரை 73387 49600
37. விழுப்புரம் விஜயசக்தி 73387 49700
38. விருதுநகர் B. செந்தில்குமார் 73387 49800
39. இப – பொவிதி – 1 M. ஹேமா 73387 20116
40. இப – பொவிதி-2 S. லட்சுமி 73387 20117’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.