விழுப்புரம் பள்ளியில் சோகம்: செப்டிக் டேங் மூடி உடைந்து சிறுமி உயிரிழப்பு


விழுப்புரம்: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா பலியானார். பள்ளியில் விளையாடியபோது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து குழந்தை உள்ளே விழுந்தது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றரை வயது மாணவி லியா என்ற குழந்தை எல்கேஜி பயின்று வந்தார். இந்த வகுப்பறையின் அருகில் கழிவறையின் செப்டிக் டேங்க் உள்ளது. செப்டிக் டேங்க் மேலே ஒரு இரும்பு தகரம் கொண்டு மூடப்பட்டு இருந்தது. இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சிறுமி லியா எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டியில் மூடப்பட்டிருந்த இரும்பு தகரம் உடைந்து உள்ளே விழுந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் அங்கு வந்து குழந்தை லியாவை மீட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

x