மதுரையில் தடையை மீறி பேரணியில் செல்ல முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மதுரை இருந்து சென்னை நோக்கி நீதிப் பேரணி இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு முன்னிலையில் இப்பேரணி துவங்கிய நிலையில். தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாக கூறி காவல்துறையினர் குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.