பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு வீடாக டோக்கன் விநியோகம் துவங்கியது!


இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியது. பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான டோக்கனில் குடும்ப அட்டைத்தாரர் பெயர், ரேஷன் கடை எண், பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான நாள், நேரம் முதலியவற்றைக் குறிப்பிட்டு டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு, வேட்டை, சேலை வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் போது, ஒரே நேரத்தில் பொதுமக்கள் கடைகளில் குவிவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலை தவிர்த்து எளிதில் பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுச் செல்லவும் வசதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அந்தந்த தேதிகளில் பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று வீடு வீடாக சென்று நியாய விலை கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகத்தை மேற்கொண்டனர்.

x