கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையத்தில் கேஸ் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அப்பகுதியில் எரிவாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டாங்கர் லாரி கவிழந்து விபத்துக்குள்ளான இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ”எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம். திருச்சியில் இருந்து டேங்கர் லாரி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து டீம் வரவழைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
2-லிருந்து 3 மணி நேரத்தில் டேங்கர் லாரியை அப்புறபடுத்தும் பணியாணது நிறைவு பெறும் என நினைக்கிறோம். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த விபத்து நடந்தது குறித்து ஆர்டிஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தான் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரியவரும்” என்று ஆட்சியர் கூறினார்.