பாலியல் விவகாரத்தில் திமுக ஏன் குரல் கொடுக்கவில்லை? - நடிகை குஷ்பு கேள்வி


சென்னை: தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவல​கமான கமலால​யத்​தில் தேசிய செயற்​குழு உறுப்​பினர் நடிகை குஷ்பு செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அண்ணா பல்கலை.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த மாணவிக்கு ஆதரவாக, கட்சி சார்பாக யாரும் எதையும் பேசக்​கூடாது. தற்போது கூட பாஜக சார்​பில் நாங்கள் இதை பேசவில்லை. பெண் என்ற முறை​யில்தான் பேசுகிறோம். மாணவிக்கு நடந்த சம்பவத்தை அரசி​ய​லாக்க வேண்​டாம்.

திமுக ஆளும் தமிழகத்​தில் பல பிரச்​சினைகளை வைத்​துக்​ கொண்டு, அதை மறைப்​ப​தற்காக பக்கத்து மாநிலத்​தில் உள்ள பிரச்​சினை​களைக் கணக்​கிடு​கிறார்​கள். தவறை தட்டிக்​கேட்​கும் தைரியம் திமுக அரசுக்கு இல்லை. திமுக மகளிர் அணி எங்கே போனது? கனிமொழி எங்கே சென்​றார்? திமுக சார்பாக பாதிக்​கப்​பட்ட மாணவிக்கு ஆதரவாக ஏன் யாரும் குரல் கொடுக்க​வில்லை? இவ்​வாறு அவர்​ கூறினார்​.

x