செம்​மொழிப்​ பூங்​கா​வில் 4-வது மலர்க்​காட்சி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்​தார்


செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 4-வது சென்னை மலர் காட்சியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தயாநிதிமாறன் எம்.பி., தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: தோட்​டக்​கலைத்​துறை சார்​பில், சென்னை, செம்​மொழிப் பூங்​கா​வில் 4-வது மலர்க்​காட்​சியை முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு:ஆண்டு​தோறும் மே மாதத்​தில் நீலகிரி, கொடைக்​கானல், ஏற்காடு போன்ற மலைவாசஸ்​தலங்​களில் உள்ள பூங்​காக்​களில் கோடை​விழா மற்றும் மலர்க்​காட்​சிகள் நடத்​தப்​படு​கின்றன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதேபோல், சென்னை மக்களைக் கவரும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மலர்க்​காட்சி நடத்​தப்​பட்டு வருகிறது, இதை ஆயிரக்​கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

கலைவாணர் அரங்​கில் 2022 ஜூன் 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்ற மலர்க்​காட்​சியை 44,888 பார்​வை​யாளர்கள் கண்டு​களித்​தனர். 2023-ம் ஆண்டு செம்​மொழிப்​பூங்​க​வில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெற்ற மலர்க்​காட்​சியை 23,302 பார்​வை​யாளர்கள் ரசித்தனர். இக்காட்​சிகளில் பல்வேறு வண்ண அயல்​நாட்டு மற்றும் பூர்வீக கொய்​மலர்​கள், பழங்கள் மற்றும் காய்​கறிகள் காட்​சிப்​படுத்​தப்​பட்டன.

தொடர்ந்து, 3-வது மலர்க்​காட்சி செம்​மொழி பூங்​கா​வில் கடந்​தாண்டு பிப்.10 முதல் 20 வரை 11 நாட்கள் நடைபெற்​றது. இதனை 1,09,027 பேர் கண்டு​களித்​தனர். தற்போது 4-வது மலர்க்​காட்சி செம்​மொழிப்​பூங்​கா​வில் நடைபெறுகிறது. இதில், பெட்டுனியா, சால்​வியா, செவ்​வந்தி, ரோஜா, பெகோனியா, ஆந்தூரி​யம், பெண்​டாஸ், சாமந்தி, டயாந்​தஸ், சினியா, டொரினியா, கேலண்​டுலா, பால்​சம், ஹைட்​ராஞ்​சியா, பாய்ன்​செட்​டியா போன்ற 50-க்​கும்மேற்​பட்ட வண்ண பூச்​செடி வகைகளுடன் அலங்​கரிக்​கப்பட்ட யானை, பட்டாம்​பூச்சி, ரயில் பெட்டி, கப்பல் உள்ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட வடிவங்கள் இடம்​பெற்றுள்ளன.

மேலும், டிரசினா, பைகஸ், கோலியஸ், அரேலியா, கார்​டிலைன், அக்லோனிமா, எராந்​தி​மம், ஃபிலோடென்ட்​ரான் போன்ற பல்வேறு அலங்கார இலைத்​தாவரங்​களும் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்ளன.

இந்த மலர்க்​காட்​சியை, முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று திறந்து வைத்​தார். தொடர்ந்து, பூங்​கா​வில் நடைபெற்ற இசை நிகழ்ச்​சி​யை​யும் பார்​வை​யிட்​டார். இம்மலர்க்​காட்சி, ஜன.18 வரை நடைபெறும். செம்​மொழிப்​பூங்​கா​வில் காலை 10 முதல் மாலை 6 மணிவரை இதற்கான நுழைவுச்​சீட்டு வழங்​கப்​படும்.

மேலும் ‘https://tnhorticulture.in/spetickets/’ என்ற இணையதளம் வாயி​லாக​வும் நுழைவுச்​சீட்டு பெற வழிவகை செய்​யப்​பட்​டுள்​ளது.இந்நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்கள் துரை​முரு​கன், எம்.ஆர்​.கே.பன்னீர்​செல்​வம், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்.பிரியா, தலைமைச் ​செயலர் நா.முரு​கானந்​தம், வேளாண்​ துறை செயலர் அபூர்வா, வேளாண் இயக்​குநர் பி.​முரு​கேஷ், தோட்​டக்​கலைத்​துறை இயக்​குநர் பெ.கு​மார​வேல் பாண்​டியன்​​ பங்​கேற்​றனர்​.

x