கோவை - ஜபல்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


கோப்புப்படம்

கோவை: கோவை - ஜபல்பூர் இடையிலான சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலக்காடு, ஷோரனூர், மங்களூரு வழியாக கோயம்புத்தூர் - ஜபல்பூர் (மத்திய பிரதேசம்) இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண். 02198 ஜபல்பூர் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 3-ம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.40 மணிக்கு கோயம்புத்தூர் வந்தடையும்.

ரயில் எண்.02197 கோயம்புத்தூர் - ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 6-ம் தேதி முதல் திங்கட்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை இரவு 8.45 மணிக்கு ஜபல்பூர் சென்றடையும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x