தடையை மீறி போராட முயற்சி: செளமியா அன்புமணி கைது!


இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிர் அணியினர் செளமியா அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நுங்கம்பாக்கம் போலீஸார் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்திருந்தனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமக-வினரை போலீஸார் கைதுச் செய்தனர். முன்னதாக தடையை மீறி போராட்டம் நடத்தப் போவதாக பாமகவினர் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் போலீசார் குவிந்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் பாமக மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பாமக மகளிரணி சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த செளமியா அன்புமணி, போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில் செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமக கட்சி நிர்வாகிகளைப் போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

x