மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு!


சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாணவி பாலியல் வழக்கு குறித்து சிறப்பு விசாராணை குழு அமைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த வழக்கில் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்க வேண்டும் என கோரி அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

x