கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம், கல்வராயன்மலை சுற்று வட்டாரப் பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் நில அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நில அதிர்வுக்கான காரணம் குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.