நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்: ரிசர்வ் வங்கி உத்தரவு


சென்னை: நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை முடக்குவதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியானது நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூடுவதற்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, நீண்ட நாட்கள் பயன்படுத்தாத கணக்குகளை 3 வகைகளாக பிரித்து அவற்றை மூட உள்ளன.

2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகளை பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப் படுகிறது. அதனால், இந்த வகை கணக்குகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, 12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப் படுகிறது. இந்த வகை கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, நீண்ட நாள்களாக இருப்புத் தொகை இல்லாமல் இருக்கும் ‘ஜீரோ பேலன்ஸ் கணக்கு’களை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x