வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ.14.50 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்துள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு வணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று ரூ.14.50 குறைந்துள்ளது. அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.