அருப்புக்கோட்டை அருகே போதைப் பொருள் தயாரிப்பு - நாட்டு வைத்தியர் உள்பட 2 பேர் கைது 


அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போதைப் பொருளுக்கான மூலப்பொருள் தயாரித்ததாக நாட்டு வைத்தியர் உள்பட 2 பேர் இன்று அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.

சென்னை அருகே மாதவரம் காவல் நிலைய சரகத்தில் போதைப் பொருளான மெத்தப்பட்டமைன் என்ற போதைப் பொருள் கடத்தியதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் விளக்கு பகுதியில் நான்குவழிச்சாலை அருகே உள்ள தனி வீட்டில் ஏ.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் மற்றும் சென்னை போலீஸார் இன்று பிற்பகல் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான மெத்தப்பட்டமைன் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அங்கிருந்த மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் (40), தற்போது மதுரையில் வசித்து வரும் நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறையைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முருகன் (44) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னை அழைத்துச் சென்றனர்.

x