சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் மற்றும் நாதக கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அண்ணா பல்கலைக். மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் டிசம்பர் 31ம் தேதி இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.