புத்தாண்டு விடுமுறை: நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!


வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை வார விடுமுறை தினமாக இருந்து வரும் நிலையில் புத்தாண்டு விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை டிசம்பர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை, பொதுமக்களின் வசதிக்காக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “வண்டலூர் உயிரியல் பூங்கா வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை பராமரிப்புப் பணிக்காகப் பூங்காவிற்கு வார விடுமுறை விடப்படுவது வழக்கம். தற்போது புத்தாண்டு, அரையாண்டு விடுமுறை தினங்கள் என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை புத்தாண்டுக்கு முந்தைய நாள் என்பதாலும், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் வருகைக்காகத் திறந்திருக்கும்” என்று அறிவித்துள்ளது.

x