பூண்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகுதி​களி​லிருந்து நீர்​வரத்து அதிகரித்து வருவ​தால் பூண்டி ஏரியி​லிருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது. திரு​வள்​ளூர் அருகே உள்ள பூண்டி ஏரி, சென்னைக்கு குடிநீர் வழங்​கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்​கு​கிறது.

இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவ மழை காரணமாக நீர்ப்​பிடிப்பு பகுதி​களி​லிருந்து மழைநீர் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கிறது. அது மிக அதிகளவில் வந்த​தால், கடந்த 12-ம் தேதி​முதல் 18-ம் தேதிவரை பூண்டி ஏரியி​லிருந்து உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில், கடந்த 26-ம் தேதி இரவு திருத்​தணி, பள்ளிப்​பட்டு உள்ளிட்ட நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் மழை பெய்​தது. அது மட்டுமல்​லாமல், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையி​லிருந்து 26-ம் தேதி இரவு​ முதல் 27-ம் தேதி காலை வரை விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்​கப்​பட்​டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்​வரத்து அதிகரித்​தது. ஏரியின் பாது​காப்பு கருதி முன்னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக, மீண்​டும் உபரிநீரை கடந்த 27-ம் தேதி காலை 9 மணிமுதல் நீர்வள ஆதாரத் துறை​யினர் வெளி​யேற்றி வருகின்​றனர்.

விநாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் வெளி​யேற்​றப்​பட்டு வந்த நிலை​யில், நீர்​வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று முன்​தினம் மதியம் முதல் வெளி​யேற்​றப்​படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்​கப்​பட்​டது. ஆகவே, 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி 3,135 மில்​லியன் கன அடியாக​வும், நீர்​மட்டம் 34.96 அடியாக​வும் உள்ளது.

பூண்டி ஏரியி​லிருந்து உபரிநீர் வெளி​யேறு​வ​தால், கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரங்​களில் உள்ள நம்பாக்​கம், ஆட்ரம்​பாக்கம், ஒதப்பை, மெய்​யூர், திருக்​கண்​டலம், மணலி புதுநகர், சடையான் குப்பம்,எண்ணூர் உள்ளிட்ட பகுதி​களில் ​தாழ்வான இடங்களில் வசிப்​பவர்​களுக்கு நீர்வள ஆ​தா​ரத் துறை வெள்ள அபாய எச்​சரிக்கையை ​விடுத்துள்​ளது.

x