ஆழிப்பேரலையை எதிர்கொண்டு நிற்கும் வள்ளுவர் சிலைபோல தமிழகம் தடைகளை தகர்த்து முன்னேறும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்


சென்னை: ஆழிப்​பேரலையை எதிர்​கொண்டு நிற்​கும் வள்ளுவர் சிலைபோல தடைகளை தகர்த்து தமிழகம் முன்னேறும் என முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கருத்து தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று திமுக தலைவரும், தமிழக முதல்​வருமான மு.க.ஸ்டாலின் தொண்​டர்​களுக்கு எழுதி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகப் பொதுமறையாம் திருக்​குறளை வழங்கிய திரு​வள்​ளுவர் தமிழர்​களின் உலக அடையாள​மாகத் திகழ்​கிறார்.

உலக வாழ்​வியலுக்கான பொது முறையை வழங்​கும் அறநெறிகளைக் கொண்ட திருக்​குறளுக்​கும் திரு​வள்​ளுவருக்​கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்​கடல் சங்கமிக்​கும் குமரி முனை​யில் திரு​வள்​ளுவர் சிலையை நிறு​வியவர் மறைந்த முன்​னாள் முதல்வர் கருணாநிதி.

தமிழகத்​தின் தலைநகரான சென்னை​யில் வள்ளுவர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்த கருணாநிதி, தமிழக அரசின் சார்​பில் திரு​வள்​ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப்​படுத்​தினார். குறள் நெறியை அனைத்து மக்களுக்​கும் பரப்பு​கின்ற வகையில் பேருந்​துகளி​லும் திருக்​குறளை எழுதி​யவர் அவர். உலக தமிழர்கள் அனைவரும் பெரு​மிதம் கொள்ளத்தக்க வகையில் திரு​வள்​ளுவருக்​கும் திருக்​குறளுக்​கும் பெருமை சேர்த்​தார் கருணாநிதி.

25 ஆண்டு நிறைவு: கடலில் கம்பீரமாக உயர்ந்து நின்ற சிலையை காண உள்நாட்​டிலிருந்​தும் வெளி​நாட்​டிலிருந்​தும் சுற்றுலாப் பயணிகள் வந்தனர். சுனாமி​யின்​போது சிலை​யின் தலை வரை ஆழிப்​பேரலை தாக்​கிய​போதும், அதனை எதிர்​கொண்டு எவ்வித சேதா​ர​முமின்றி கம்பீரமாக நின்​றார் திரு​வள்​ளுவர்.

சிலை திறக்​கப்​பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்​திருக்​கிறது. கால் நூற்​றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்​றாண்​டுகள் நிலைத்து நிற்​க​விருக்​கும் சிலைக்கு, பேரறி​வுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்​கிறது நம் திமுக அரசு.

கண்ணாடிப் பாலம்: பொது​வாழ்வுக்​கும் தனி வாழ்க்கைக்​கும் துணை நிற்​கும் திருக்​குறளை வழங்கிய திரு​வள்​ளுவரை இளந்​தலை​முறை தமிழர்​களும் போற்றிடும் வகையில் பேரறி​வுச் சிலை​யின் வெள்​ளி​விழா கன்னி​யாகுமரி​யில் டிச. 30, 31, மற்றும் ஜன.1 ஆகிய நாட்​களில் சிறப்​போடு நடைபெற​விருக்​கிறது. வெள்​ளி​ விழா​வின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்​துள்ள பாறைக்கும் அருகே​யுள்ள விவே​கானந்தர் மண்டபம் அமைந்​துள்ள பாறைக்​கும் இடையே இந்தியா​விலேயே முதன்​முறையாக கண்ணாடிப் பாலம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

அதனை திறம்பட நிறைவேற்றி​யிருக்​கிறார் பொதுப்​பணித்​துறை அமைச்சர் எ.வ.வேலு. நவீனத் தொழில்​நுட்​பத்​தில் கடல் நடுவே அமைந்​துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை திறந்து வைக்க​விருக்​கிறேன். வள்ளுவர் வழங்கிய திருக்​குறளின் நெறி போற்றி நாம் வாழ வேண்​டும்.

தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்​டும் என்ற உன்னத நோக்​கத்​துடன் வெள்​ளி​விழா கொண்​டாடப்​படு​கிறது. ஆழிப்​பேரலையை எதிர்​கொண்டு வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்​பதுபோல தமிழகம் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருக்​குறளில் உள்ள அதிகா ரங்​களைத் துணை​யாகக் ​கொண்டு எதேச்​ச​தி​காரத்தை வெல்​வோம். வள்​ளுவம் ​போற்றி வாழ்க்கை சிறந்திட அனை​வருக்​கும் 2025 புத்​தாண்டு நல்​வாழ்த்து​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

x