நமக்கு வழிகாட்டியாக ​திகழ்கிறார்​ நல்லகண்ணு: நூற்றாண்டு ​விழாவில்​ ​முதல்வர்​ ஸ்டாலின்​ புகழாரம்


சென்னையில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், நல்லகண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். உடன் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தர்மலிங்கம் அறக்கட்டளை தலைவர் மணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்​னை: நூறு வயதை கடந்​தும்​ தமிழ்​ச்​ ச​மு​தாயத்​துக்​காக நல்​லகண்​ணு இன்​னும்​ உழைக்​க த​யாராக இருப்​ப​தாக​வும்​ நமக்​கு வழி​காட்​டி​யாக ​தி​கழ்​கிறார்​ என்​றும்​ ​முதல்​வர்​ ​மு.க.ஸ்​டா​லின்​ பெருமிதம்​ தெரி​வித்​துள்​ளார்​.

​விடு​தலை ​போராட்​ட வீரரும்​ இந்​தி​ய கம்​யூனிஸ்​ட்​ இயக்​கத்​தின்​ முதுபெரும்​ தலைவரு​மான நல்​லகண்​ணு நூற்​றாண்​டு ​விழா தர்​மலிங்​கம்​ அறவழித்​ தொண்​டு கல்​வி அறக்​கட்​டளை சா​ர்​பில்​ ​மாமனிதருக்​கு மக்​கள்​ ​விழா என்​ற பெயரில்​ சென்​னை​யில்​ நேற்​று நடை​பெற்​றது. அறக்​கட்​டளை​யின்​ நிறுவனர்​ த.மணிவண்​ணன்​ வரவேற்​புரை ஆற்​றினார்​. உலகத்​ தமிழர்​ பேரமைப்​பு தலைவர்​ பழ.நெடு​மாறன்​ தலைமை உரை​யாற்​றினார்​.

அப்​போது அவர்​ பேசும்​போது, ‘நாட்​டின்​ ​விடு​தலைக்​காக ​போராடிய ​காந்​தி, நேரு, வல்​லபாய்​ பட்​டேல்​, தமிழகத்​தின்​ பெரும்​ தலைவர்​களாக ​தி​கழ்​ந்​த பெரி​யார்​, அண்​ணா, ​காமராஜர்​, கருணாநி​தி ஆகியோரின்​ நூற்​றாண்​டு ​விழாவை அவர்​கள்​ வாழும்​ நாளிலேயே ​கொண்​டாட ​முடிய​வில்​லை. ஆனால்​, ​முதன்​முதலாக நல்​லகண்​ணு​வின்​ நூற்​றாண்​டு ​விழாவை அவர்​ வாழும்​ ​காலத்​திலேயே ​கொண்​டாடும்​ வாய்​ப்​பு கிடைத்​துள்​ளது. நல்​லகண்​ணு ​தி​யாகம்​, தொண்​டு, எளிமை, இனிமை ஆகியவற்​றால்​ நிறைகுடம்​ ​போன்​றவர்​. அவருடைய ​தி​யாகத்​துக்​கு ஈடு இணை கிடை​யாது” என்​றார்​.

சிறப்​பு ​விருந்​தினராக பங்​கேற்​ற தமிழக ​முதல்​வர்​ ​மு.க.ஸ்​டா​லின்​, நல்​லகண்​ணு பிறந்​த நாளை ​முன்​னிட்​டு இயற்​றிய பாடலை​யும்​, நல்​லகண்​ணு குறித்​து 100 க​விஞர்​கள்​ எழு​தி​ய க​விதை நூலை​யும்​ வெளி​யிட்​டார்​. பின்​னர்​ அவர்​ பேசி​ய​தாவது: நல்​லகண்​ணுவை வாழ்​த்​துவதற்​காக நாங்​கள்​ வர​வில்​லை. அவரிடம்​ இருந்​து வாழ்​த்​து பெற வந்​திருக்​கிறோம்​. 100 வயதைக்​ கடந்​து நமக்​கு வழி​காட்​டி​யாக ​தி​கழ்​கிறார்​. தமிழ்​ச்​ ச​மு​தாயத்​துக்​காக இன்​னும்​ உழைக்​கத்​ த​யாராக இருக்​கிறார்​. அவருக்​கு அம்​பேத்​கர்​ ​விருதை கருணாநி​தி வழங்​கினார்​. நான்​ தகைசால்​ தமிழர்​ ​விருதை வழங்​கினேன்​. அது எனக்​கு கிடைத்​த பெருமை. அம்​பேத்​கர்​ ​விருதை பெறும்​போது தமிழக அரசு சா​ர்பில்​ வழங்​கப்பட்​ட ரூ.1 லட்​சத்​தில்​ ரூ.50 ஆ​யிரத்​தை கட்​சிக்​கும்​, ரூ.50 ஆ​யிரத்​தை ​விவசாய சங்​கத்​துக்​கும்​ ​கொடு​த்​து​விட்​டார்​.

அதே​போல தகைசால்​ தமிழர்​ ​விரு​தில்​ கிடைத்​த 10 லட்​ச ரூபா​யுடன்​ ரூ. 5 ஆ​யிரம்​ சேர்​த்​து, ரூ.10 லட்​சத்​து 5 ஆ​யிர​மாக தமிழக அரசுக்​கே நிவாரண நி​தி​யாக அளித்​தா​ர்​. அவரின்​ 80-ஆவது பிறந்​தநாளின்​போது, அன்​றைய ​மாநிலச்​ செயலாளர்​ ​தா.பாண்​டியன்​ உள்​ளிட்​டோர்​ ​திரட்​டி தந்​த ரூ.1 கோடியை​யும்​ கட்​சிக்​கே ​கொடு​த்​தவர்​ நல்​லகண்​ணு. இவ்​வாறு, இயக்​கம்​ வேறு ​தான்​ வேறு என்​று நினைக்​காமல்​, இயக்​கத்​துக்​காகவே இயக்​க​மாவே வாழ்​ந்​து ​கொண்​டிருக்​கிறார்​.

சா​தி​யவாதம்​, வகுப்​புவாதம்​, பெரும்​பான்​மைவாதம்​, எதேச்​சா​தி​காரம்​, மேலா​தி​க்​கம்​ ஆகிய அனைத்​துக்​கும்​ எ​திராக, ஜனநாயகச்​ சக்​தி​கள்​ ஒற்​றுமை​யுடன்​ பணி​யாற்​றுவது​தான்​ நல்​லகண்​ணுக்​கு நாம்​ வழங்​கும்​ நூற்​றாண்​டு ​விழா பரிசு. இவ்​வாறு ​முதல்​வர்​ பேசினார்​.

இந்​தி​ய கம்​யூனிஸ்​ட்​ கட்​சி தேசி​ய செயலாளர்​ டி.ராஜா: நல்​லகண்​ணு தன்​னலம்​ இல்​லாத கடும்​ உழைப்​பாளி. ​விவசா​யிகளின்​ நலனுக்​காக​வும்​, ஏழைகளின்​ நலனுக்​காக​வும்​ பாடு​படு​பவர்​. மக்​கள்​, ​மாநிலம்​, நாடு, கட்​சி இவற்​றின்​ வளர்​ச்​சி பற்​றி​தான்​ அக்​கறையோடு செயல்​படு​வார்​.

ம​தி​முக பொதுச்​ செயலாளர்​ வைகோ: நல்​லகண்​ணுவை பார்​த்​து இளைஞர்​கள்​ லட்​சி​யவா​தி ஆக வேண்​டும்​. அவரது ​தி​யாக வரலாற்​றை இளைஞர்​கள்​ அறிந்​து ​கொள்​ள வேண்​டும்​.

கம்​யூனிஸ்​ட்​ கட்​சி ​மாநில செயலாளர்​ ​முத்​தரசன்​: ஒரு கட்​சி தொடங்​கிய நாளும்​, ஒரு தலைவரின்​ பிறந்​த நாளும்​ ஒரே தே​தி​யில்​ அமை​யும்​ வாய்​ப்​பு எல்​லாருக்​கும்​ கிடைப்​ப​தில்​லை. அந்​த வகை​யில்​, நல்​லகண்​ணுவுக்​கு கிடைத்​துள்​ளது. அவரது நூற்​றாண்​டு ​விழா ​மாவட்​ட வாரி​யாக ஓராண்​டு​க்​கு நடை​பெற உள்​ளது. ​விழா​வில்​, ஓய்​வுபெற்​ற சென்​னை உயர்​ நீ​தி​மன்​ற நீ​திப​தி சந்​துரு, ​மார்​க்​சிஸ்​ட்​ கம்​யூனிஸ்​ட்​ கட்​சி​யின்​ மூத்​த தலைவர்​ டி.கே.ரங்​க​ராஜன்​, மக்​கள்​ இயக்​கங்​களின்​ தேசி​ய கூட்​டமைப்​பு நிறுவனர்​ மே​தா பட்​கர்​, தமிழக ​முன்​னாள்​ தலைமை செயலாளர்​ வெ.இறையன்​பு, சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ​விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர்​ கோ.​விசுவநாதன்​, ​விஞ்​ஞானி ம​யில்​சாமி அண்​ணாதுரை, சென்​னைப்​ பல்​கலைக்​கழக ​முன்​னாள்​ தமிழ்​த்​துறை தலைவர்​ வீ.அரசு, நடிகர் விஜய் சேதுபதி, மூத்​த தொழிற்​சங்​க தலைவர்​ இரா.குசேலர்​, க​விஞர்​ வைர​முத்​து, நடிகர்​ சிவகு​மார்​ உள்​ளிட்​டோரும்​ பங்கேற்றனர்​.

x