எங்க உட்கட்சிப் பிரச்சனையை நாங்க பேசிக்கொள்கிறோம்: அன்புமணி ராமதாஸ்


நேற்று பாமக பொதுக்குழு கூட்டத்தில் மேடையில் ஆவேசமாக பாமக தலைவர் மைக்கை வீசியெறிந்து விட்டு சென்ற நிலையில் இன்று (டிச 29) தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கட்சி பொதுக்குழு கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடப்பது சகஜம் தான். எங்களுக்கு எல்லாம் ஐயா தான், எல்லா கட்சியிலும் நடந்தது போல நேற்றைய தினம் நடந்தது. இந்தாண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு பாமகவின் வளர்ச்சிப் பணிகள் நிறுவனர் ஐயா ராமதாஸ் அவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து குழுவாக பேசினோம். கட்சியின் வளர்ச்சி, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பேசினேன்.

பாமக ஒரு ஜனநாயக கட்சி, காரசாரமான விவாதம் நடப்பது இயல்பு. எங்களுடைய கட்சி ஜனநாயக கட்சி, எங்களுடைய உட்கட்சிப் பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டியதில்லை. பாமக உட்கட்சி பிரச்சனை குறித்து மற்றவர்கள் பேசக்கூடாது. எங்களுக்கு எப்பவுமே அவர் ஐயா தான்” என்றார்.

x