பாம்பன் கடற்பகுதியில் வாள் மீன்களின் வரத்து அதிகரிப்பு


பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் ர் வலையில் சிக்கிய வாள் மீன்கள்.

ராமேசுவரம்: பாம்பன் கடற்பகுதியில் வாள் மீன்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாம்பனில் விசைப்படகு, ஆழ்கடல் விசைப்படகு, நாட்டுப்படகு என என 200க்கும் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். தற்போது பாம்பன் கடற்பகுதியில் வாள் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது, ''கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக் கூடியது வாள் மீன் ஆகும். இது மணிக்கு சராசரியாக 100 கி.மீ முதல் 110 கி.மீ வரையிலும் நீந்தக்கூடியது. ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதனுடைய விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடிஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்ற அர்த்தம்.

மயிலின் தோகைகள் போன்று இந்த மீனின் துடுப்புகள் இருப்பதால் பாம்பன் மீனவர்கள் மயில் மீன் என்ற பெயரிலும் இதனை அழைக்கின்றனர். தனது வாழ்நாளில் வாள் மீன்கள் வெவ்வேறு கடல் பகுதிக்கு இடமாறிக் கொண்டே இருக்கும். இதனால் இதன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து இதனை பிடிக்க முடியாது. வாள் போன்று இருக்கும் இந்த மீனின் தாடையை பயன்படுத்தி மற்ற மீன்களை தனியாகவே வேட்டையாடும்.

கடலின் மேல் பரப்பில் தாவி தாவி நீந்தும் போது படகில் உள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத் விடுவதும் உண்டு. இம்மீனை வியாபாரிகள் ஒரு கிலோ 150 ரூபாய் வரையிலும் வியாபாரிகள் வாங்குகின்றனர்'' என்றனர்.

x