அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணையில் சந்தேகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு


சென்னை: சென்னை காவல் ஆணையர், உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் மாறு​பட்ட கருத்தை தெரி​வித்து வருவது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசா​ரணை​யில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து​வதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்​கில் ஞானசேகரன் என்ற நபரை போலீ​ஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்​றனர். இதுதொடர்பாக நேற்று முன்​தினம் சென்னை காவல் ஆணையர் அருண் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘மாணவி பாதிக்​கப்​பட்டது தொடர்​பாக, பல்கலைக்​கழகத்​தில் இருந்து காவல் கட்டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு அளித்த புகாரின் பேரிலே, வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது’’ என்றார்.

ஆனால், உயர்கல்வித்​ துறை அமைச்சர் கோவி.செழியன், ‘‘பல்​கலைக்​கழகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள பாலியல் துன்​புறுத்தல் தடுப்​புக் குழு​வுக்கு எந்த புகாரும் முதலில் வரவில்லை. காவல்​துறை மூலமாகவே, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி​யிருப்பது பல்கலைக்கழக நிர்​வாகத்​துக்கு தெரிய​வந்​தது’’ என கூறியுள்ளார்.

இந்நிலை​யில், காவல் ஆணையர் அருணும், உயர்​கல்​வித் துறை அமைச்சர் கோவி.செழியனும் மாறு​பட்ட கருத்தை தெரி​வித்​திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்​தி​யிருப்​பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்​றம்​சாட்டி உள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்​தில் அண்ணாமலை கூறி​யிருப்​ப​தாவது: அண்ணா பல் கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்​லும் விதம், பல சந்தேகங்களை எழுப்பு​கிறது. உயர் கல்வித்​துறை அமைச்​சர், ஊடகங்​களில் பேசும்​போது, முதலில் காவல்​துறை​யிடம் புகார் அளித்த பிறகே பல்கலைக்​கழ கத்​துக்​குத் தகவல் தெரிவிக்​கப்​பட்டது என்று கூறியிருக்​கிறார்.

ஆனால், சென்னை காவல் ஆணையர், பல்கலைக்​கழகத்​தின் குழு மூலமாகவே காவல் துறைக்​குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடு​கள், உண்மை​யில் யாரைக் காப்​பாற்ற திமுக அரசு முயற்சிக்​கிறது, உண்மை​யில் என்ன நடந்​தது, அதுமட்டுமின்றி பாதிக்​கப்​பட்ட மாணவி, குற்​றவாளிக்​குத் தொலைப்​பேசி அழைப்பு வந்த​தாகத் தெரி​வித்​த​தாக​வும், சார் என்று கூறி குற்​றவாளி பேசி​ய​தாக​வும் தெரி​வித்​ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதனை அப்படியே வெளிவ​ராமல் மறைக்​கும் முயற்சி நடப்​ப​தாகத் தெரி​கிறது. இந்தக் குற்​றத்​தில் தொடர்​புடைய​வர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும்வரை தமிழக பாஜக இதனை விடப்​போவ​தில்லை. பிரச்​சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்து​விடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்​குமே​யானால், ​திமுக அரசுக்​கும் இந்​தக் குற்​றத்​தில் தொடர்பு இருப்​ப​தாகத் ​தான் கருத முடி​யும். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

x