கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சாட்டை - அண்ணாமலை சவுக்கடி போராட்டத்தில் சுவாரஸ்ய சம்பவம்!


கோவை: கோவையில் உள்ள தனது விட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் அடித்துக்கொள்ளவிருந்த சாட்டை மாற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை சாட்டையில் அடித்துக்கொள்வதற்காக முதலில் மாரியம்மன் கோயிலில் இருந்து தேங்காய் நாரினால் செய்யப்பட்ட தடிமனான சாட்டை கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர், சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து கொண்டுவந்த சற்று லேசான சாட்டையால் அடித்துக்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோவையில் உள்ள தனது விட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். உடன் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்.

x