மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து; 40 பயணிகள் காயம் - ஊத்தங்கரையில் அதிர்ச்சி


கிருஷ்ணகிரி: மேல்மருவத்தூர் கோயிலுக்கு பக்தர்களுடன் சென்ற பேருந்து ஊத்தங்கரை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் எட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 150-க்கும் மேற்பட்டோர் 3 தனியார் பேருந்துகளில் மேல்மருவத்தூருக்கு இன்று காலை புறப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வீரியம்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது, முதலில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த 52 பேரில் 40 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 6 பேர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

x