கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கோவையில் உள்ள தனது விட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்#Annamalai | #BJP | #Kovai pic.twitter.com/GftPes4yUC
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 27, 2024