பிரபல இயக்குநர் எஸ்.டி.சபா காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!


பிரபல இயக்குநர் எஸ்.டி.சபா என்றழைக்கப்படும் சபாபதி தட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக திண்டிவனத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 61.

நடிகர் விஜயகாந்தின் ‘பரதன்’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சபா, அதன் பின்னர் பிரசாந்த் நடித்த ‘எங்க தம்பி’, லிவிங்ஸ்டன் நடித்த ‘சுந்தர புருஷன்’, பிரபு தேவா நடித்த ‘விஐபி’, நந்தா நடித்த ‘புன்னகை பூவே’, ஜெய்வர்மா நடித்த ‘நாம்’, பிரபு நடித்த ‘அ ஆ இ ஈ’, மதுஷாலினி நடித்த ‘பதினாறு’ ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார்.

தெலுங்கிலும் ஜெகபதி பாபு நடித்த ‘பந்தெம்’, கன்னடத்தில் ‘ஜாலி பாய்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

x