பாம்பனில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு


ராமேசுவரம்: பாம்பனில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்தார். பாம்பன் பழைய ரயில் பாலத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உடல், மர்மமான முறையில் வேதாளை கடற்கரையில் கரை ஒதுங்கியது குறித்து மெரைன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டபம் தோணித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (29). மீனவரான இவர், அருகிலுள்ள பாம்பன் பழைய ரயில் பாலத்தில் வழக்கம்போல நேற்று இரவு தூண்டில் போட்டு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

காலை பால்ராஜ் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், மீனவர் பால்ராஜின் உடல் வேதாளை கடற்கரையில் மாலை ஒதுங்கியுள்ளது. மீனவர் பால்ராஜ் உடலை கைப்பற்றி மண்டபம் மெரைன் போலீஸார் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மர்மமான முறையில் மீனவர் உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

x