கோவை: திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன். நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிசிடிவி கேமரா இல்லை என்று சொல்ல வெட்கமாக இல்லையா? நான் காவல் துறையில் இருந்திருந்தால் எனது நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும். நாளை காலை 10 மணிக்கு என்னை நானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வேன். நாகரீகமான அரசியல், மரியாதையெல்லாம் இருக்காது. நாளை முதல் என அரசியல் வேற மாதிரி இருக்கும். திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன்.
நாளை முதல் 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். நாளை முதல் பாஜக-வை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் 10 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனை கொடுக்க வேண்டும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.