கைதானவர் திமுகவை சேர்ந்தவர் என பொய் தகவல் பரப்பப்படுகிறது: அமைச்சர் ரகுபதி ஆவேசம்


சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என பொய் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. குற்றவாளியைக் காப்பாற்றும் எண்ணம் இல்லை. குற்றவாளிக்கு உரியத் தண்டனை பெற்றுத் தருவோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

விவரங்களை வெளியிட்டால் பாதிக்கப்பட்ட பெண் எப்படி தைரியமாகப் புகார் அளித்திருப்பார். தமிழக அரசு மீது நம்பிக்கை இருந்ததாலேயே பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்க நினைத்தால் அது நடக்காது
மாணவியை பாலியல் கொடுமை செய்த நபரை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

மாணவி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல மூடி மறைக்காமல் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

x