பூந்தமல்லி பார்வையற்றோர் பயிற்சி மையத்தில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி தொடங்க ஆலோசனை


சென்னை: பூந்​தமல்​லி​யில் உள்ள பார்​வைத்​திறன் குறைபாடு உடையோ​ருக்கான அரசு தொழிற்​ப​யிற்சி மையத்​தில், நடப்பு கல்வி​யாண்​டில் (2024-25) புத்தக பைண்​டிங் படிப்​புக்கான விண்​ணப்​பங்கள் வழங்​கப்​பட​வில்லை. இந்த படிப்பை நிறுத்த அரசு திட்​ட​மிட்​டுள்ளதாக கூறி பார்​வைத்​திறன் குறைபாடு உடையோ​ருக்கான தேசிய கூட்​டமைப்​பின் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்​பில் விளக்​கமளிக்க உத்தர​வி்ட்​டிருந்​தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ராம் மற்றும் நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்​வின் பிரபாகர் ஆஜராகி, மாற்றுத் திறனாளிகள் நலத்​துறை இயக்​குநர் தரப்​பில் அறிக்கை தாக்கல் செய்​தார். அந்த அறிக்கை​யில், ‘பார்​வைத்​திறன் குறைபாடு உடையோரது கோரிக்கையை ஏற்று, புத்தக பைண்​டிங் படிப்பை தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. வரும் ஜனவரி முதல் இந்த படிப்பை தொடங்​கும் வகையில் விண்​ணப்​பங்கள் விநி​யோகிக்​கப்​பட்டு வருகிறது.

மேலும், டெலி மெடிசின், தகவல் தொழில்​நுட்பம் மற்றும் மென்​பொருள் வடிவ​மைப்பு போன்ற பயிற்சி வகுப்பு​களை​யும் புதிதாக தொடங்க ஆலோசிக்​கப்​பட்டு வருகிறது’ என தெரிவிக்​கப்​பட்​டது. அதை ப​திவு செய்து ​கொண்ட நீ​திப​தி​கள் வழக்கை ​முடித்து ​வைத்து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

x