மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் இளைஞரின் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்


மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர்.

ராமநாதபுரம்: கடலாடி அருகே விபத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் இன்று (டிச.25) அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் சஞ்சய் (22). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று, இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சஞ்சயின் பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி அவரது உடல் உறுப்புக்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் சொந்த ஊரான மேலக்கிடாரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் சஞ்சயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று மாலை அரசு மரியாதையுடன் மேலக்கிடாரம் கிராம மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

x