தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் 30 வரை மழைக்கு வாய்ப்பு!


காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நெருங்கும் நிலையில் டிசம்பர் 30ம் தேதி வரை தமிழகத்திலும், புதுவையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதேபோல, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியிலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தை நெருங்கியுள்ள நிலையில் அதே இடத்தில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இம்மாதம் 30-ம் தேதி வரையில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதனான மழை பெய்ய வாய்ப்பிருப்பாதாக தெரிவித்துள்ளது.

x