சென்னை: பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் விஜய் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான இன்று ஏன் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்?. பெரியாருக்கு அஞ்சலி செலுத்திய தவெக தலைவர் சகோதரர் விஜய், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான இன்று ஏன் அஞ்சலி செலுத்தவில்லை...?
டெல்லியில் பிரதமர் அவர்கள் எந்தக் கட்சி சார்ந்தவராக இருந்தாலும் முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி இருக்க வேண்டுமில்லையா ? இது ஒரு சாமானியனின் கேள்வி?' எனத் தெரிவித்துள்ளார்