நேர்மையும் நுண்ணறிவும் கொண்ட தலைவராக விளங்கியவர் எம்ஜிஆர்: அண்ணாமலை


சென்னை: எம்​ஜிஆரின் 37-வது நினைவு தினம் இன்று அனுசரிக்​கப்​படு​கிறது. இதையொட்டி, ஆயிரத்​தில் ஒருவரான எம்ஜிஆர் வாழ்க்கை ஒரு சகாப்தம் என அண்ணாமலை புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்​களில் எம்ஜிஆர் பெயர் முக்​கிய​மானது. மூன்று முறை தமிழக முதல்வர் பொறுப்​பிலிருந்​தும் தான், தனது குடும்பம் என்று எண்ணா​மல், தமிழக மக்களுக்காக உழைத்​தவர். பெருந்​தலைவர் காமராஜரைப் போலவே, நேர்​மை​யும் நுண்​ணறி​வும் கொண்ட தலைவராக விளங்​கியவர் எம்ஜிஆர். சமூகத்​தில் பின்​தங்கிய மக்களின் முன்னேற்​றத்​துக்​காகவே தமது செயல்​பாடுகளை அமைத்​துக் கொண்​ட​வர். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சமத்து​வத்தை இலக்​காகக் கொண்ட நேரடி நலத் திட்​டங்​களுக்கு முக்​கி​யத்துவம் கொடுத்​தவர். அவரது நிர்​வாகம், சமூகத்​தின் விளிம்​புநிலை மக்களை முன்னேற்று​வ​தில் கவனம் செலுத்​தி​யது.

ஒட்டுமொத்த சமூகத்​தை​யும் மேம்​படுத்​தும் தொலைநோக்​குத் திட்​டங்​களைச் செயல்​படுத்​தி​ய​வர். அவர் கொண்டு வந்த சத்துணவுத் திட்​டம், பள்ளி​களில் மாணவர் சேர்க்கையை அதிகப்​படுத்​தியது என்றால் மிகை​யா​காது. தமது ஆட்சி​யில், தமிழ்க் கலாச்​சா​ரம், தமிழ் மொழி மற்றும் கலைகளை ஊக்கு​வித்​தார். முதல்​வராக இருந்தபோது சமூக நலன், கல்வி, சுகா​தாரம் ஆகிய​வற்றில் தமிழகம் அர்ப்​பணிப்புடன் இருந்​தது.

எம்ஜிஆர் நூற்​றாண்டு விழா​வின்​போது, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளி​யிட்​டதோடு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலை​யத்​துக்கு புரட்​சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்​சந்​திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் சூட்​டிப் பெரு​மைப்​படுத்​தி​யதும் பிரதமர் மோடி​தான். எம்ஜிஆரின் உயரிய எண்ணங்கள் அனைத்​தை​யும் இன்று பிரதமர் மோடி செயல்​படுத்தி வரு​கிறார். ஆ​யிரத்​தில் ஒரு​வரான எம்​ஜிஆரின் வாழ்க்கை ஒரு ச​காப்​தம்.

x