விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயபிரபாகரன் அழைப்பு!


சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் தேமுதிக கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்கே சுதீஷ், பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்து, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x