அருணன் உட்பட 6 பேருக்கு கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிப்பு: பபாசி விருது பட்டியலும் வெளியீடு!


பேராசிரியர் அருணன், என்.ஸ்ரீராம்

சென்னை: புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் அருணன் உட்பட 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் அருணனுக்கு உரைநடைக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது. கலைராணிக்கு நாடகத்துக்கான கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. என்.ஸ்ரீராமுக்கு சிறுகதைகளுக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது. நெல்லை ஜெயந்தாவுக்கு கவிதைக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது. சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கு நாவலுக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது. நிர்மால்யாவுக்கு மொழிபெயர்ப்புக்கான “கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது” வழங்கப்படுகிறது.

அதேபோல பபாசி விருது பெறுவோர் பட்டியலும் வெளியாகியுள்ளது :

* சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணாதி விருது - கற்பகம் புத்தகாலயம்

* சிறந்த நூலகருக்கான விருது - ஆர்.கோதண்டராமன்

* சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது - பெல் கோ

* சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்

* சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் சபா.அருணாச்சலம்

* சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா

* சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது - சங்கர சரவணன்

* முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது - மணவை பொன்.மாணிக்கம்

* சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது - மரபின் மைந்தன் முத்தையா

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது புத்தகக் கண்காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

டிச.27ம் தேதி மாலை 4.30 மணி அளவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். புத்தகக்காட்சி விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.

x