தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு


சென்னை: தமிழகத்​தி​லுள்ள அனைத்து நீதி​மன்​றங்​களி​லும் துப்​பாக்கி ஏந்திய போலீஸ் பாது​காப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தர​விட்​டுள்​ளார்.

திருநெல்​வேலி​யில் மாவட்ட நீதி​மன்றம் நுழைவா​யில் அருகே மாயாண்டி என்ற இளைஞர் கடந்த வெள்​ளிக்​கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்​யப்​பட்​டார். சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​திகள் தாமாக முன்​வந்து இந்த கொலை வழக்கை விசா​ரணைக்கு எடுத்​துக் கொண்​டனர். போலீஸ் தரப்​புக்கு பல கேள்விகளை எழுப்பி, நீதி​மன்​றங்​களில் நிரந்தர பாது​காப்பு ஏற்பாடு செய்​யும்​வரை, தற்காலிக​மாக, மாவட்ட நீதி​மன்​றங்​கள், முக்​கியமான இடங்​களில் தேவையான எண்ணிக்கை​யில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என நீதிப​திகள் உத்தர​விட்​டனர்.

இந்நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து வகை நீதி​மன்​றங்​களி​லும் பாது​காப்பை பலப்​படுத்து​வதோடு, துப்​பாக்கி ஏந்திய போலீ​ஸாரை பாது​காப்​புக்காக நிறுத்த வேண்​டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் ஆணையர்​கள், மண்டல ஐஜிக்​கள், காவல் கண்காணிப்​பாளர்​களுக்கு உத்தரவு பிறப்​பித்​துள்ளார்.

இதன்​படி, அனைத்து மாவட்​டங்​களி​லும் நீதி​மன்ற வளாகங்கள் மற்றும் அதனை சுற்றி​யுள்ள பகுதிகளில் துப்​பாக்கி ஏந்திய போலீ​ஸார் பணியில் ஈடுபடுத்​தப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகை​யில், ‘அதிகள​வில் கூட்டம் வரும் நீதி​மன்​றங்​களில் ஏற்கெனவே துப்​பாக்கி ஏந்திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. தற்போது கூடு​தலாக எஸ்.ஐ ரேங்​கில் உள்ள ஒருவர் உட்பட இரு​வர் நவீன துப்​பாக்​கி​களு​டன் பாது​காப்பு பணி​யில்​ ஈடுபட உத்​தர​விடப்​பட்​டுள்​ளது’ என்​றார்​.

x