மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்


கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசினார்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்தியா நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தொடங்கி 30 நாட்கள் நடைபெறும். இதில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நகழ்ச்சிகளான பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கதக்களி, குச்சுப்புடி, ஒடிசி, மோகினி ஆகிய நடனங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இந்த நாட்டிய விழாவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என ஏராளமானோர் கண்டு ரசிப்பர்.

இந்நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான இந்திய நாட்டிய விழாவின் தொடக்க நிகழ்ச்சி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தர மோகன் தலைமையில் கடற்கரை கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் பங்கேற்று, இந்திய நாட்டிய விழைவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, இசை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வரையில் என கடற்கரை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணிவரை பரத நாட்டியம் உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர்சதிஷ், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், சோழிங்கநல்லூர் சட்டபேரவை தொகுதி எம்எல்ஏ.அரவிந்த்ரமேஷ், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலாத் துறை அலுவலர் சக்திவேல் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் கலந்துகொண்டனர்.

x