உதகை: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 4 நாட்கள் சுற்றுப்பயணமாக உதகை வந்தார்.
ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் 9-வது அதிபராக 2022 முதல் 2024 வரை பணியாற்றினார். முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கே 1994-ம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கி 6 தடவை இலங்கையின் பிரதமராக இருந்துள்ளார். மீண்டும் 2024 அதிபர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக உதகை வந்துள்ளார். இதன்படி இலங்கையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மார்க்கமாக கோத்தகிரி சாலை வழியாக கிளம்பி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் பங்களாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் உதகையில் இருப்பதால் அவர் இங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அவர் தங்கியுள்ள பங்களா சுற்று வட்டார பகுதி முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.