வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... டிசம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பு!


தமிழகத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலை ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு- வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வழுவிழந்து வருகிறது. இதனையடுத்து சென்னை உட்பட 9 துறைமுகங்களில் ஏற்பட்டிருந்த 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளையும், மறுநாளும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 25ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x