சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார்.
அமலாக்கத்துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், இருவரது ஜாமீன் மனுவையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அதற்கு முன்பாகவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார். அதையடுத்து நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, எப்படி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என கேட்டு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.