விருதுநகர்: ரயில் மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 25 பேர் கைது


விருதுநகர்: விருதுநகரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறு பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கண்டித்து விருதுநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருதுநகர் ரயில் நிலையம் முன்பு கூடி மத்திய அரசை கண்டித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அதையடுத்து ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை டிஎஸ்பி யோகேஷ் தலைமையிலான போலீஸார் நுழைவாயில் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை விருதுநகர் மேற்கு போலீஸார் கைது செய்தனர்.

x